தன்னை ஒரு பெண்ணாக பாவித்து, திருமங்கையாழ்வார் மடல் ஏறியதாகக் கூறும் பாசுரங்களின் தொகுப்பு நுால்.
தமிழ் மரபில் பெண்கள் மடல் ஏறுவதில்லை. இதை மாற்றி, திருமங்கையாழ்வார் பாடியுள்ளதை சிறிய திருமடல் விளக்குகிறது. பெருமாள் பெருமைகளை பெரிய திருமடல் பேசுகிறது.
ராமாவதாரத்தில், சூர்ப்பனகை மூக்கை திருமால் வெட்டிய செயலையும், தாடகையை வதம் செய்த வரலாற்றையும் கூறியுள்ளது. பக்தி இலக்கியத்தில் தோன்றியுள்ள முதல் மடல் இலக்கியம் இது. சிறிய திருமடல், இறைவன் மீதான அன்பின் தவிப்பை வெளிப்படுத்துகிறது. பெரிய திருமடல், புராணக் கதைகளைக் கூறுகிறது. படிக்க வேண்டிய சுவாரசியம் மிக்க நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்