எழுத்தாளர் கல்கி ஐந்து பாகங்களாக எழுதிய மாபெரும் படைப்பு, சுருக்க வடிவில் நுாலாக்கம் பெற்றுள்ளது. மூலக்கதை மாறாமல் எளிய நடையில் வனப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
கல்கி உருவாக்கிய மாபெரும் காவியம் பொன்னியின் செல்வன். இந்த கதையை படித்து முடிக்க முடியுமா? அதற்கு நேரம் வாய்க்குமா என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அக்குறையை போக்கும் வகையில், சுருக்கமாக எளிமையாக புரியும் நடையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
எழுத்தாளர் கல்கி உருவாக்கிய பிரமாண்ட கதைக்களம், பாத்திரங்கள், சித்தரிப்புகள் மாறாமல், சுவாரசியம் குறையாமல் இருக்கிறது. ஒரே மூச்சில் படிக்கும் வகையிலான நுால்.
– வி.விஷ்வா