அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள சத்து மற்றும் மருத்துவ பண்புகள் பற்றிய நுால். பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக தகவல்கள் தரப்பட்டுள்ளன.
காய்கறி விவசாயத்தின் வரலாற்றை முதலில் பதிவு செய்து உள்ளது. அதன் தொன்மையை ஆராய்ந்து தகவல்களை தந்துள்ளது. தொடர்ந்து, காய்கறிகளின் முக்கிய குணங்கள் மற்றும் ஊட்டச்சத்து விபரங்களை தந்துள்ளது. முதுமையை தடுக்கும் வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 37 வகை காய்கறிகள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வகை காய்கறியால் உடலில் என்ன விளைவு ஏற்படும் என்பதை தெரிவிக்கிறது. காய்கறிகளை சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள் குறித்த தகவல்களும் உள்ளன.
காய்கறிகள் குறித்த அறிவு நுால்.
– திசை