வரலாற்று புதினமாக மலர்ந்துள்ள நுால். தஞ்சை கோவில் கண்ட ராஜராஜன் தான், அருள்மொழி தேவன் என்றும், சித்தப்பாவுக்காக சோழ நாட்டை விட்டுக் கொடுத்தவன் எனவும் பதிவு செய்துள்ள நாவல் நுால்.
அருள்மொழி தேவனின் அண்ணன் மதுராந்தகனின் மர்ம மரணத்தை துப்பு துலக்கும் முயற்சியை தெளிவாக தெரிவிக்கிறது. ஆதித்த சோழன் மரணத்திற்கு பின், உடன் இருந்து குழி பறித்த உத்தம சோழன் பற்றி விவரிக்கிறது.
அந்தக் காலத்து ஒற்றர்கள், பதுங்கு குழிகள், கடல் கடந்த பயணம், போர் சூழ்ச்சிகள், கட்டழகு பெண்கள் பற்றிய வர்ணனை, அந்தரங்கம், நாட்டுக்காக விட்டுக் கொடுக்கும் காதல் என விவரிக்கிறது. பழங்காலத்துக்கே கூட்டிச் செல்கிறது. குந்தவை மறக்க முடியாத பாத்திரப் படைப்பாக உள்ளது.
– சீத்தலைச் சாத்தன்