வாழ்வின் அன்றாட செயல்பாடுகளில் அறிந்திருக்க வேண்டிய சட்ட விதிகளை தொகுத்து தந்துள்ள நுால். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டப்படி, நம் நாட்டில் ஆட்சி நடக்கிறது. அதன் அடிப்படையில் தான் நடைமுறை சட்டங்கள் உள்ளன. அவை நீதியை நிலை நாட்டுவது பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் வாழ்வுக்கு உதவும் சட்ட விதிகளை 82 தலைப்புகளில் தொகுத்து தருகிறது. ஒவ்வொன்றும் மிக எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளன.
அன்றாட செயல்களில் சட்ட விதிகளை மதித்து நடந்து கொள்ள ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட நுால்.
– மதி