வாழ்வில் புனிதம் பெற, ஆன்மிக வழி காட்டும் நுால். யோகம், ஞானம் பற்றிய உபதேசங்கள் சிறப்பாக தரப்பட்டு உள்ளன.
முக்தி அல்லது நிரந்தர மன அமைதிக்கான தகுதிகள்,கர்மயோகம், ஜபம் செய்வோம், தாமச குணம் விளக்கங்கள், தீர்த்த யாத்திரை, கோவில் உணவு போன்ற தலைப்புகளில் தகவல்களை அள்ளித் தருகிறது. பகவத் கீதை, உபநிஷத்துக்களின் தத்துவங்களை ஆதாரமாகக் காட்டுகிறது.
தனக்குள் தெய்வத்தைத் தேடுவோருக்கு வழிகாட்டுகிறது. கர்மத்தின் நிலைகள் வாழ்வில் உயர்த்தும் என்கிறது. யோகம், ஆசனம், தியானம் மூன்றும் வாழ்வில் செய்யும் அற்புதங்களை அழகுற எடுத்துக் காட்டுகிறது. இறை வாழ்விற்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டி நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்