பொருளாதாரத்தில் வீழ்ந்தவர்கள், மீண்டும் வாழ்வை எட்டிப் பிடிக்கும் முயற்சியை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
உறவுகளை பின்னோக்கிப் பார்க்கிறது, ‘கீலாகலமான வீடு’ கதை. வேலையில் சேரும் முன், சாம்பலாக வேண்டியிருந்த சான்றிதழை பத்திரமாய் மீட்டது உட்பட மனிதம் இன்னும் மரிக்கவில்லை என உணர்த்தும் சிறுகதைகள் சுவாரசியம் தருகின்றன.
குடிநீருக்காய் அலையும் அவலத்தை விவரிக்கும் ‘தண்ணீரும் கண்ணீரும்’ கதை நெஞ்சை நெகிழ வைக்கிறது. உயிரினங்கள் மீது காட்டும் வாஞ்சையை வெளிப்படுத்துகிறது.
கொரோனா கால கொடுமையின் உச்சத்தை தொடுகிறது, ‘மரண வண்டி’ கதை. எளிய சமூக உணர்வுகளை காட்சிப்படுத்தும் கதைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்