பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தின் நீட்சியாக வெளிவந்துள்ள நாவலின் முதல் பாகம். உத்தமசோழன் தொடங்கி, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆட்சி காலங்களில், சோழநாடு சாம்ராஜ்யமாக விளங்கிய வரலாறு, நீண்ட கதை வடிவில் தரப்பட்டுள்ளது.
சோழர் ஆட்சிக் காலத்தில் சிற்பம், கட்டடம் ஓவியக்கலைகளில் அடைந்திருந்த மகோன்னதத்தை காட்சிப்படுத்துகிறது. முதல்பாகத்தில் இளவரசர் அருள்மொழியின் ஈழப் படையெடுப்பு, கீழ் திசை கடல் பயணங்கள், கடல் கொள்ளையர்களைச் சிறைப்படுத்தல், சம்பா நோக்கிய பயணம் போன்ற நிகழ்வுகள் வழியாக அவரை சமுத்திர குமாரனாக சித்தரித்துள்ளது.
விறுவிறுப்பான மொழிநடையில் அமைந்துள்ள நாவல் நுால்.
– புலவர் சு.மதியழகன்