ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் சடங்குகளுக்கு தகுந்த காரண காரியங்களை விளக்கும் நுால். தானம், இறை வழிபாடு, பூஜைஅறை விதிமுறைகள் பற்றி எல்லாம் தெளிவுபடுத்துகிறது.
ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தும் பொருள் நிறைந்தவை என்பதை தெளிவாக உரைக்கிறது. சடங்கு சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதன் வழியாக இன்பமாக வாழும் முறையை எடுத்துரைக்கிறது. உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் நடைமுறையை உரைக்கிறது.
அறிஞர்களிடம் அறிந்தவை, சொற்பொழிவுகளில் கேட்டவை, பக்தி நுால்களில் படித்தவை என தகவல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. சமயம், கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை நன்கு அறிந்து, அதற்கு ஏற்ப வாழ்வை அமைத்துக்கொள்ள உதவும் ஆன்மிக விளக்கங்கள் நிறைந்த நுால்.
– திசை