பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் நீட்சியாக எழுதப்பட்ட வரலாற்று நாவல் தொகுப்பின் மூன்றாம் பாகம். இதில், சிவபாத சேகரனாக பெரியகோவிலை உருவாக்கிய நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆகம முறைப்படி பெருவுடையாருக்கு கோவில் அமைய அடிப்படை காரணம், கேரளாந்தகன் திருவாயில், கோபுர மாடங்கள், துாண்கள், வெவ்வேறு தளங்களின் பெயர்கள், விக்கிரகங்கள், அக்கால அளவை முறை பெயர்களை எல்லாம் குறிப்பிடுகிறது.
கூத்த நுால், பஞ்ச மரபு கூறும் 108 கரணங்கள், முத்திரைகள், வாத்தியம், நிருத்தம், அபிநயம், தாளம், இசை மரபுகள் பற்றிய செய்திகளையும் உடையது.
வரலாற்று புதினத்தில் இலக்கிய மணம் கமழ்கிறது.
– புலவர் சு.மதியழகன்