மரணம் பற்றிய தத்துவத்தை, அறிவுப்பூர்வ சிந்தனையுடன் சுய அனுபவத்துடன் தெளிவாக விளக்கும் நுால்.
மரணத்திற்குப் பின் உயிர் நான்கு நிலைகளை அடைவதாக குறிப்பிடுகிறது. ஞானியர் முக்தி பெறுவதால் மீண்டும் பிறப்பது இல்லை. புண்ணிய ஆத்மாக்கள் சுக்ல கதி பெறுவர். புண்ணியம் உள்ளவரை சத்திய லோகத்தில் இருப்பர்.
மரணத்திற்குப் பின், தாவரங்கள் மற்றும் ஐந்தறிவு விலங்காக பிறக்க வைப்பது அதோ கதி என விளக்குகிறது.
மரணம், முற்பிறவி வாசனை என பல மர்மங்கள் விளக்கப்பட்டு உள்ளன. பிறந்த பின் ஒவ்வொரு நாள் நிகழ்வையும் விசித்திரமாய் சித்தரிக்கிறது. மரணத்தின் மறுபக்கத்தைக் காட்டி ஆச்சரியப்படுத்தும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்