ராஜேந்திர சோழனின் வெற்றி சிறப்புகளை விவரித்து எழுதப்பட்டுள்ள நாவலின் நான்காம் பாகமாக வெளிவந்துள்ள நுால்.
ராஜேந்திர சோழனுக்கு நடந்த முடிசூட்டு விழா, ராஜராஜேச்சரத்தில் வழிபட்டது, ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு சென்றது எல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன. தீர்த்தத்துறை அகத்தீஸ்வரர் கோவிலுக்கு நிவந்தனம் கொடுத்த கல்வெட்டு செய்தியும் உள்ளது. பழையாறை பற்றிய தொல்லியல் சான்றுகளும் தரப்பட்டுள்ளன.
இசைவாணர், ஆடற்கலை வல்லார்களை ஈர்க்கும் திறன் பெற்றிருந்ததையும், லாமுரியைக் கைப்பற்றிய நிகழ்வும் விரித்துரைக்கப்பட்டுள்ளது.
கலையார்வத்தை பறைசாற்றும் வரலாற்றுப் புதினம்.
– புலவர் சு.மதியழகன்