பிள்ளைகளிடம் காட்டும் அன்பு வேறுபட்டால் பொறாமை உருவாகும் என உணர்த்தும் நாவல். உளவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
ஒரு கொடியில் பூத்த இரு மலர்களில் மூத்தவள் அழகு மிக்கவள். இளையவள் சற்று நோஞ்சானாக இருப்பவள். மருத்துவர் அறிவுரைப்படி இளையவள் மீது கூடுதலாக பரிவு காட்டினர் பெற்றோர். அதுவே பொறாமை ஏற்பட காரணமானது; வன்மத்தின் உச்சிக்கு செல்கிறது.
இளையவளுக்கு அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்தனர். எதிர்பாராவிதமாக அவள் முகம் சிதைக்கப்பட்டது. திருமணம் தடைபட்டது. அமெரிக்கா சென்ற மூத்தவள் மாடல் அழகியானாள். வசதியாக வாழ்ந்தாள். அது நிலைத்ததா... ‘ஆசிட்’ ஊற்றி சிதைத்தது யார் போன்ற கேள்வியுடன் விறுவிறுப்பாக விவரிக்கிறது.
– புலவர் சு.மதியழகன்