சூழ்நிலையால் ஏற்படும் கொலை, திருட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து, விடுதலையாகி வருவோரை திருத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால்.
பைரவன் தங்கை ஆனந்தியை, அவளுடன் கல்லுாரியில் படித்த கணேஷ் காதலிப்பதாகக் கூறி கற்பை சூறையாடி விடுகிறான்; அவனை கொலை செய்கிறான் பைரவன். இதனால் சிறைத் தண்டனை கிடைக்கிறது. அங்கு, நான்கு பேருடன் நட்பு ஏற்படுகிறது.
தங்கள் கதையைக் கூறுகின்றனர். காந்திஜி பிறந்த நாளில் விடுதலை பெறுகின்றனர். சிறை அதிகாரிகள் வழியாக முதல்வருக்கு கடிதம் எழுதிய பைரவன், கடன் பெற்று, நால்வரும் தொழில் துவங்கி வாழ்வில் ஏற்றம் அடைவதை சொல்கிறது.
குற்றவாளிகள் வாழ்வை சீரமைக்கும் நாவல்.
– முனைவர் கலியன் சம்பத்து