பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால்.
பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, இங்கே அன்னை மீராவாக நிரந்தரமாக தங்கி விட்டார். மகான் அரவிந்தரின் அடியொற்றி நடந்தவர். நீ நீயாய் இரு... என்பது தான் அன்னை சொல்லும் வேதம்.
கடவுளை வற்புறுத்தி அழைக்காதே என்பதும் இவரது தாரக மந்திரம். யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு, வேலை, பொழுதுபோக்கு என வாழ்க்கையின் அம்சங்களை அனுபவித்துக் கொண்டே கடவுளை அடைவது தான் படைப்பின் பெருமை என்பதை உணர்த்துகிறது.
– எம்.எம்.ஜெ.,