வாழ்க்கை, வார்த்தை இரண்டுக்குமான அர்த்தங்களை, சமூக பார்வையுடன் எடுத்துரைக்கும் கவிதை தொகுப்பு நுால். துன்பத்தை பகிர மனிதர்களை தேடும் மனங்களை காட்டுகிறது.
ஆண்களிடம் சிக்கிய பெண் குரலை, ‘ஆணவ ஆசை தகிக்கும்’ கவிதை பக்குவமாக பதிய வைக்கிறது. உதட்டின், போலி புன்முறுவலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சமூக அவலங்களை குமுறலாய் பேசுகிறது. பதவிக்காக, நாய்களை போல் நிற்கும் இடமெல்லாம் குரைப்பதை நடிப்பு என்கிறது.
உள்ளதை சொல்லச் சொன்னால், உள்ளத்தை கண்கள் சொல்லி விடும் என, வார்த்தை தடுமாற்றத்தை பேசுகிறது. அமைதி பெற, மவுனம் சிறந்த மருந்து என பருகச் சொல்கிறது. கவிதை பொருளை ஓவியம் வாயிலாக பதிய வைக்கிறது.
– -டி.எஸ்.ராயன்