‘பில்கணன்’ என்ற வடமொழி காவியத்தை அழகான தமிழ் வெண்பாக்களில் தரும் நுால்.
மகளுக்கு பாடம் கற்பிக்க அழகிய இளைஞனை ஏற்பாடு செய்கிறான் மன்னன். இளம் உள்ளங்கள் பேதலித்து விடுமோ என பயந்து, இருவருக்கும் இடையில் திரையை மாட்டி விடுகிறான். பெண்ணுக்கு குஷ்ட வியாதி என்றும், இளைஞன் பார்வையற்றவன் என்றும் சொல்லி வைக்கிறான். இதனால், விரிசல் ஏற்படும் என எண்ணுகிறான்.
அதையும் மீறி அரும்பும் காதலை பொறுத்துக் கொள்ளாத மன்னன், இளைஞனை துாக்கு மேடைக்கு அனுப்புவதாக கவிதைகள் சொல்கின்றன. மது கொடுத்து கூட்டம் சேர்க்கும் கட்சிகள் பற்றியும் மனம் கொதித்து எழுதப்பட்டுள்ளது. நிலைத்து நிற்கும் நீதி போதனை நுால்.
– சீத்தலைச் சாத்தன்