நன்மைகள் நல்கும் சட்ட நாதர், அஷ்ட பைரவர் பற்றி விளக்கும் நுால்.
இரணியன் வதம் முடிந்ததும், மகாவிஷ்ணு, நரசிங்க உருவத்துடன் விண்ணுலகத்தவரும் கண்டு பயந்து ஓடும் படி திரிந்தார். அவரை சிவபெருமான் அருளால் வீரபத்திரக் கடவுள், அஷ்ட பாதங்களோடு சர பட்சியாக வந்து பிளந்து, துயர் போக்கியதாக கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம் கோவிலில் நெய்தீபம் சுடர் விட உதவிய எலி, மாவலி என்ற அரசனாகப் பிறந்து, இந்திரனை வெற்றி கொண்டது கூறப்பட்டுள்ளது. பைரவரின் எட்டு வித பெயர்களும், ஆயுதங்களும் விளக்கப்பட்டுள்ளன.
பைரவர் சஹஸ்ர நாமாவளி முழுதும் தரப்பட்டு உள்ளது. ஆன்மிகம் வளர்க்கும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து