சிக்கலான வாழ்க்கை முறையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒன்றுக்கொன்று வேறுபாடான களங்களை கொண்டவை. கொரோனாவை எதிர்கொண்ட கேசவனின் மரணம், சடங்குகள் இல்லாமல் நடந்த இறுதி அஞ்சலி, தாலி சடங்கில் மனைவி எடுத்த முடிவு என, ‘திசையறு’ கதை வலியோடு பகிர்கிறது.
விறகு சேகரித்து வாழ்க்கை நடத்தும் சாமானியர்களிடம், வனத்துறை காட்டும் கோரத்தை, ‘வனதேவதை’ கதை, இரக்கம் கொள்ள வைக்கிறது. ஊரடங்கால் பாதிக்கப்படுவது வசதி படைத்தவரா, சாமானியரா என கேள்வி கேட்கிறது. ஒன்றாக படித்த இரு நண்பர்களில் ஒருவர் அரசியல்வாதி; மற்றொருவர் ஆசிரியர். இருவரது குண மதிப்பீட்டை பேசுகிறது. பார்வை இழந்தவருக்கு, இறந்தவரால் பார்வை கிடைக்க, மருத்துவரிடம் அவர் கேட்பது மனதை ஈரமாக்குகிறது.
– -டி.எஸ்.ராயன்