குடும்பம், சமூகம், காதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள சிறுகதை நுால். படிக்கும் போது காட்சிகள் கண் முன் விரியும் வண்ணம் நேர்த்தியாக உள்ளது.
கருத்துக்கள் வாழ்விற்கு வழிகாட்டுதலாக அமைந்து உள்ளன. உறங்காத உறவுகள், நீ வாழ்ந்து காட்டணும் எனத் துவங்கி, கவுரவம், வலிமை என, 11 தலைப்புகளில் சிறுகதைகள் அமைந்துள்ளன. குடி போதையால் மகன், மனைவியை இழந்தவன், மகளுக்காக மனம் திருந்தியதை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
தற்கொலையை தவிர்த்து வாழ்வில் சாதித்து காட்ட வேண்டும்; பொறாமை கொண்டால் ஏற்படும் கஷ்டங்கள் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.
மற்றவர்களை படிக்க வைத்து பயன் பெறச் செய்யும் வகையில் அமைய பெற்றுள்ள நுால்.
– வி.விஷ்வா