ஆற்றல் மிகுந்த சொற்களால் அழகாகக் கட்டமைக்கப் பெற்ற கவிதைகளின் தொகுப்பு நுால். அநியாயங்களை வெளிப்படுத்துகிறது.
தமிழ் மொழியின் நிலையை விளக்கும் கவிதையில், அன்னிய மொழியின் அடிவருடியாக மாறி வரும் இழிநிலையை கண்முன் நிறுத்துகிறது.
இந்த உலகம் என்றும் பகட்டாக விளங்குவோரின் காலிலேயே விழுந்து கிடக்கிறது. உழைக்கும் ஏழை எளியோருக்கு மரியாதையே இல்லை என்பதை, குடை -செருப்பு என்று உருவகம் செய்யப்பட்டுள்ளது.
மத வெறி குறித்த கவிதையில் ‘எம்மதமும் சம்மதம், இந்தச் சம்மதத்தில் கூட மதத்தின் ஊடுருவல்’ என சாடுகிறது. சமூக அவலங்களை சொல்லும் நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்