மக்களுக்கு ஒரு தொடர் ஆண்டை முன்னிலைப்படுத்தும் நோக்கில் வாதங்களை முன்வைக்கும் தகவல் களஞ்சிய நுால். திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் சித்திரை முதல் நாளில் நிறுவப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உள்ளது.
தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் சுழற்சி வேகக் கட்டுப்பாட்டுச் செயல்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சி, லீப் வினாடி, வானியல் நேரம், புவியியலில் ஏற்படும் தாக்கங்களை தெளிவுற விளக்குகிறது.
சந்திரன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரி ஆண்டு உருவானதன் பின்னணியை அறிய முடிகிறது. வார நாட்களை விளக்கும் ஆய்வுகள் வானியல் சிந்தனைகளை வளர்க்கக் கூடியவை.
அண்டத்தையும், கால மாறுபாடுகளையும் அறிந்து கொள்ள உதவும் அறிவியல் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு