உறவுகளை பேணி, தான தர்மங்கள் செய்வதை மேன்மையாக சித்தரிக்கும் நாவல். எளிய நடையில் விறுவிறுப்பான காட்சிகளுடன் படைக்கப்பட்டுள்ளது.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களை இயல்பாக நடமாட வைத்து கதையை சித்திரமாக மனதில் பதிக்கிறது.
குடும்பத்தில் ஏற்படும் சிக்கலும், விரிசல்களும் தெளிந்த நீரோட்டமாக பதிவாகியுள்ளது. உணர்வு மயமான சொற்கள் சம்பவங்களை நுட்பமாக விவரித்து காட்டுகின்றன.
அன்பும், பரிவும் ஒருவரை எப்படி எல்லாம் நிமிர வைக்கும் என்பதை வலியுறுத்துகிறது. தனி மரத்தை தோப்பாக்கும் வித்தையை உணர செய்துள்ளது. குடும்ப உறவு, தான தர்மங்களின் மாட்சியை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் நாவல்.
– ராம்