சமூக சீர்கேடுகளை சுட்டிக் காட்டுவதில் முக்கியத்துவம் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். குயில்களே வருக, வேண்டல், வாழ்வின் விளிம்பு, உழவர்கள், துன்பம் எனத் துவங்கி நதி, என்னோடு சேர்ந்து, பாரதமே நீ என 136 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
தனிமையில் தான் தனித்துவமாக இருக்கிறோம். அத்தனிமையே கற்பனை வாகனத்தில் ஏற்றி நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது என, தனிமையின் சிறப்பு பாடப்பட்டுள்ளது. ‘ஏழையின் சொத்து’ என்ற கவிதையில் நம்பிக்கையே ஏழைகளின் சொத்தாகும் என்கிறது.
பல கவிஞர்கள் கற்பனைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், கருத்துகளுக்கும் சொற்கள் அமைத்து கவிதைகளாய் தந்துள்ளனர். அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால்.
– வி.விஷ்வா