கற்பனைகளை உணர்ச்சிப் பூர்வமாக வடிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழுக்கும் அமுதென்று பேர், கடவுள் தந்த அழகிய வாழ்வு, துளிப்பா, பாவை வடித்த புவி என துவங்கி, 43 தலைப்புகளில் உள்ளன.
துளிப்பா என்ற தலைப்பின் கீழ் நிறங்கள், நட்பு, பொறுப்பு, கொடை, இன்று, நாளை என இரண்டு அல்லது மூன்று வரிகளில் குறுங்கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
‘அன்னை வயிற்றை உதைத்து ஆவலுடன் வந்த நொடி நீ தந்த முதல் உழைப்பு’ என இப்பூமியில் பாதம் பதிப்பதற்கு முன்பே உழைப்பு உருவாகியது என்ற ஆழ்ந்த கருத்தை, ‘உழைக்கும் கரங்கள்’ என்னும் கவிதையில் உணர்த்துகிறது. கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கருவியாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால்.
– வி.விஷ்வா