பழங்குடி இன மக்கள், தாங்கள் பேசும் மொழியிலே எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மூல படைப்பு தமிழ் எழுத்து வடிவத்திலும், அதற்கான மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. மலைப்பகுதி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. காட்டின் ஆன்மாவை சிதைக்கும் அம்சங்களையும் சித்தரிக்கிறது.
நுட்பமான விவரிப்புகள், புதிய அனுபவத்தை தருகிறது. கவிதைகளில் அன்பும், நெகிழ்ச்சியும், வலியும், நம்பிக்கையும் நிறைந்து காணப்படுகின்றன. மனிதர்களின் இதயத் துடிப்பும், காட்டின் பேரெழுச்சியும் வெளிப்படுகிறது. இதுவரை அறிந்திராத அகக்கண் வெளியை திறந்து விடுகிறது.
காட்டின் மொழியை, வலியை தெளிவாக காட்டும் கவிதை தொகுப்பு நுால்.
– மலர்