சொற்களின் தாண்டவத்தில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால்.
கண் அவன், நிலவின் சப்தம், கடல் வாழ்க்கை என துவங்கி, விவசாயி, கவிதையும் புதுக்கவிதையும், கழுகு பார்வை போன்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தென்றல் வந்தது தெம்மாங்கு பாடி என்பதும் ஒரு தலைப்பு.
கவிஞர் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், கர்மவீரர் காமராஜர், அப்துல் கலாம் என தலைவர்களையும், அவர் தம் சிறப்புகளையும் கவிதை வழியில் விளக்குகின்றன. அமையப்பெற்ற கவிதைகள் எல்லாம் நம் பண்பாடு, இந்திய ஒருமைப்பாடு, மொழிச் சிறப்பு, அரசியல் நுகர்வு மற்றும் ஆன்மிகத்தை வெளிப்படுத்துகின்றன. நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமான கவிதை நுால்.
– விஷ்வா