நாகரிகத்துடன் பழகுவதற்கு வழிமுறைகளை உரைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அம்மா, மனதின் உடல், கற்க கசடற, பாலுணர்வு, மூளைச்சலவைக்கு உடன்படோம், நல்லதோர் குடும்பம், பலவீனத்துக்கான பரிகாரம், பெருந்தன்மை, நகைச்சுவை உணர்வு என 10 தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.
இங்கிதம் என்ற வார்த்தை ‘இங்கு இது இதம்’ என்பதை உணரச் செய்வதே என்று நாகரிகத்துடன் பழகுவோம் கட்டுரை விளக்குகிறது. வாழ்வில் முன்னேற எடுத்து வைக்கக் கூடிய முதற்படி, தாயை பேணிப் போற்றுவதே என்ற கருத்தை வலியுறுத்துகிறது. கசடற கற்க வேண்டும் என, வள்ளுவர் குறளை பேணி காக்கும் வகையில் அமைந்துள்ளது.
அனைத்து கட்டுரைகளும் தன்னம்பிக்கை ஊற்றாய் அமைந்துள்ளன. வழிகாட்டும் நுால்.
-– வி.விஷ்வா