திருவரங்கத்தில் கலியுக தெய்வமாக, பேசும் அரங்கனாக கோவில் கொண்டு திகழ்வதன் பின்னால் உள்ள சுவையான சரித்திரத்தைப் பக்தி ரசம் சொட்ட விவரிக்கிறது.
கிளிச்சோழனுக்கு கிளி உருவில் சுக மகரிஷி உபதேசித்த கதையாக தொகுக்கப்பட்டுள்ளது. தேவதைகளில் விஷ்ணு உயர்ந்தவரோ, மந்திரங்களில் பிரணவமே உயர்ந்ததோ, அதுபோல திவ்ய ேஷத்திரங்களில் ஸ்ரீரங்கமே உயர்ந்தது என கூறுகிறது.
நல்லோரை காக்கவும், தர்ம ஸம்ஸ்தாபனம் செய்யவும் ஸ்ரீமன் நாராயண் அவதாரங்கள் எடுப்பதை கூறுகிறது. காவிரிக்கரையில் சந்திர புஷ்கரணி தடாகத்தின் சிறப்பையும், ரெங்கநாதர் கோவில் குறித்த பெருமைகளையும் சுவைபட விவரித்துள்ளது.
-– இளங்கோவன்