தனித்தமிழ் ஆராய்ச்சி ஆவணத்தின் மீள்பதிப்பாக மலர்ந்துள்ள நுால். தமிழின் தோற்றம், தொன்மை, மாற்றங்களை அறியச் செய்கிறது.
தமிழ், திராவிடம் என்ற வடிவை ஒப்பிட்டு சான்றுகள் முன்வைத்து நிறுவுகிறது. மூவேந்தர் பெயர்களின் மூல வரலாற்றை ஆய்ந்து விவரிக்கிறது. தமிழ் மொழியில் பல்வேறு ஒலித் தொகுதிகள் ஆராய்ந்து முன்வைக்கப்பட்டுள்ளன.
கால்டுவெல் ஆய்வுகளில் உள்ள சிறப்பியல்புகள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. மொழி ஆராய்ச்சியின் கீழ், திரிநிலைப்படலம், சிதைநிலைப்படலம், மறைநிலைப்படலம், கிளர்நிலைப்படலம், வருநிலைப்படலம் என வகைப்படுத்தி ஆராய்ச்சி செய்துள்ளது. தாய்மொழி வேர்களை அறிய வைக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு