இலங்கை தமிழர் பகுதி வாழ்க்கை முறையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல். மக்களின் துன்பம் மிக்க வாழ்வை இயல்பு மாறாமல் படம் பிடிக்கிறது.
புத்தகத்தின் மூலப்பிரதி பற்றிய செய்திகள் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை தமிழரிடையே நிலவும் வேற்றுமை மனப்பான்மையை படம் பிடிக்கிறது. வறுமையிலும் பெண்ணை இழிவாக நடத்தும் மனப்போக்கை சித்தரிக்கிறது.
ஜாதிப் பெருமையை காக்க, பெற்ற மகளையே விஷம் வைத்து கொல்வது பற்றியும் விவரிக்கிறது. ஆதிக்க ஜாதியில் நல்ல எண்ணத்துடன் செயல்படும் கதாபாத்திரத்தையும் சுட்டிக் காட்டுகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களுடன், தமிழரிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை கச்சிதமாக எடுத்துரைக்கிறது. இலங்கையில் ஒரு பகுதி சமூகத்தின் அவல நிலையை சொல்லும் குறுநாவல்.
– மதி