அன்றாட நிகழ்வுகளை, உணர்வுகளை, வலிகளை, ஆணாதிக்கத்தை, பெண்ணியத்தை வெவ்வேறு தலைப்புகளில் சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
திருமண வயதில் பெண் வைத்திருக்கும் பெற்றோர் சந்திக்கும் கசப்பான நிகழ்வுகளும் அதற்கான தீர்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. பெரிய முதலாளி, மாத்தி யோசி கதைகளில் ஆணாதிக்கம் தலை துாக்கினாலும், பெண்ணியமும் பேசப்படுகிறது. ஆண்களின் அவலக் குரல் கதைகளில் ஒலிக்கின்றன.
மாணவர் பிஞ்சு உள்ளங்களில் எழும் சின்ன ஆசைகளை விவரிக்கிறது. பெண், மாணவியாக, மனைவியாக, குடும்பத் தலைவியாக, வேலை பார்ப்பவராக, சமூக ஆர்வலராக தடம் மாறாது இயங்குவதையும், பறவைகள் மீது கொண்ட அன்பையும் விவரிக்கும் தொகுப்பு நுால்.
–- புலவர் சு.மதியழகன்