தந்தை, மகன் இடையே உள்ள பாசத்தை பகிரும் நாவல்.
கல்லுாரி படிப்பவருக்கு, பேராசிரியர்கள் கண்டிப்பு, பாடத்தில் திணறல் அரட்டை என வகுப்பறை நினைவுகளுடன் துவங்குகிறது. விடுதி உணவு, சக மாணவர்களின் நட்பு, பள்ளி நாட்கள் பகிர்வு, பொழுது போக்க சினிமா, நாடகம் என படம் பிடிக்கிறது. நாடகம் மீது தீராத காதல் ஏற்பட்டு சமூக ஏற்றத்தாழ்வுகளை எடுத்துரைக்கும் கதைகளை எழுதுகிறார்.
இதற்கு, மற்றொரு சமூகம் முட்டுக்கட்டை போடுகிறது. இதை முறியடிக்க நட்பு, மதம் கடந்த நேயத்தை பேசுகிறது. படிப்பில் முதல் மார்க்; நாடகத்திலும் தனித்திறன். இதில் உயர்படிப்பு படித்து அரசு பதவியில் சேர்வதா, கலைச்சேவை செய்வதா என்ற குழப்பத்துக்கு அற்புதமாக விடை சொல்கிறது. நெல்லை மண்ணைக் கதைக்களமாக உடைய நாவல்.
– -டி.எஸ்.ராயன்