கண்ணனின் வாழ்க்கை மற்றும் லீலா வினோத அற்புதங்களை சொல்லும் நுால். பத்து அவதாரங்களில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் கதையைச் சுவைபட விவரிக்கிறது.
படைப்பின் கதை, பூமியின் பரிமாணம், காலப் பிரிவினை, குல வரலாறு, அரச வம்சத் தொடர் ஆகிய செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. அதர்வண, ரிக், சாம வேதங்களில் இதிகாசம், புராணம், கதைகள் இருப்பதை காட்டுகிறது.
மீன், ஆமை, பன்றி, சிங்க மனிதன், குள்ளன், பரசுராமர், கோதண்ட ராமர், பலராமர், கண்ணன், கல்கி ஆகிய திருமாலின் 10 அவதாரங்கள், மன்மத நாததத்தரால் விளக்கப்படுகிறது.
தேவாசுரப் போரும், முடிவும், காலநேமி விஷ்ணுவிடம் போவதும், தேவர் சபைக் கூட்டமும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. படிக்க வேண்டிய விஷ்ணு வம்ச வரலாறு.
– முனைவர் மா.கி.ரமணன்