ஆசிரியர்-இரத்தினசக்திவேல்.வெளியீடு:காளீஸ்வரி பதிப்பகம், 2,வடக்கு உஸ்மான் சாலை,முதல் மாடி, தி.நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:96.அறிவியல் வளர்ச்சி,வசதிகள்,அதிக ஆடம்பரங்களால் நமத ஆரோக்கிய டயக்க சக்திகள் உயர்வதற்குப் பதில் மிகவும் குறைந்து பலர் பல பிணிகளாலும், மலச்சிக்கலாலும் அவதிப்படுகின்றனர்.விஞ்ஞான மருத்துவக் கண்டுபிடிப்புகள் மிகுந்த வளர்ச்சி பெற்றாலும் தனிமனித ஆரோக்கியம் மிகவும் குன்றிப் போய் பலவித நோயினால் பரிதவிக்கின்றனர்.ஒவ்வொர இல்லத்திலும் மலச்சிக்கல் நோயால் அவதிப்படுவோர் உள்ளனர்.நகரத்தாரிடம் இதன் தாக்கம் அதிகம் உள்ளது.அதற்கான நிரந்தரத் தீர்வுகள்,மருந்தில்லா உணவுகள். மூலிகை வகைகள்,சுலப சிகிச்சைகளை அன்பர் இரத்தின சக்திவேல் அவருக்கே உரிய பாணியில் இக்காலத்திற்கும் அனைவருக்கும் ஏற்புடைய முறையில் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்.