சந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள, 164 பாடல்களின் தொகுப்பு நுால். பக்தி, காதல், தத்துவம் என்ற பிரிவுகளை உடையது.
‘கொடி மின்னலை விழி ஜன்னலால் சிறை பிடித்தது யாரோ அது யாரோ...’ என காதல் சொல்லும் பாடல் உள்ளது. புது மெட்டு என்ற பாட்டில், ‘புத்தம் புதிதாய் வரைந்தேன் ஒரு பாட்டு, பொன் மயிலே உன் திருமுகம் பார்த்து...’ என்று குறிப்பிடுகிறது. இன்னொரு பாட்டில், ‘சேலையில் வந்தால் மரபுக் கவிதையாம், சுடிதாரில் வந்தால் புதுக் கவிதையாம்’ என்கிறது.
பக்தி பரவசத்தில், ‘மூச்சுக்கு 300 முறை சொல்வேன் முருகா முருகா முருகா... முயற்சிக்கும் பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் துணை வருபவன் நீ’ எனப் பாடி பரவசம் அடையச் செய்யும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்