உத்தரகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய நால்.
கேதார்நாத் மலையில் மந்தாகினி, மதுகங்கா, சீர்கங்கா, சரஸ்வதி, ஸ்வரன்தாரி நதிகள் ஓடுகின்றன. இங்கு சிவபெருமான் ஜோதிலிங்கமாக அருள் பாலிக்கிறார். ஆதி சங்கரர் வரலாறு அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மடங்கள் குறித்தும் அறியத்தருகிறது.
பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையைக் கூறி, அதன் மூலம் மன அமைதி காணலாம் என வழி கூறுகிறது.
மஹாபாரதம் ஏன் எழுதப்பட்டது என விளக்கி, ஏழாம் அறிவான கடவுளை அடைய வழி கூறுகிறது. சங்கரர், வேதவியாசர், பிரபுபாதா, காந்திஜி கூறிய வாழ்வியல் வழிகளை அறியத்தருகிறது. சனாதன தர்மத்தின் விளக்கம் கூறி நிறைவு பெறுகிறது.
– முனைவர் கலியன் சம்பத்து