கவிஞர் வாலியுடனான அனுபவங்களை அழகுற அமைத்து சுவை சேர்க்கும் நுால்.
தமிழகத்தின் சிறப்புகளை பாடலாக்கி, பெண்ணின் வனப்புக்கு ஈடாக்கி பாடல் எழுதியுள்ள பெருமையை முதல் கட்டுரை எடுத்துரைக்கிறது. தபால் அட்டையில் எழுதி, ரயிலில் பயணித்த டி.எம்.சவுந்தரராஜன் கைகளில் திணித்ததே, ‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...’ என துவங்கும் பாடல். எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதிய முதல் பாடல் போன்ற சுவையான செய்திகள் பாடல்களோடு அமைந்து இனிமையூட்டுகின்றன.
கண்ணதாசனுக்கும், வாலிக்கும் அக்காலத்தில் போட்டி என்பது உண்மையா? கண்ணதாசன் எழுதிய பாடலே, வாலியை வாழ்வின் விரக்தியிலிருந்து மாற்றியது போன்ற செய்திகளோடு உள்ள சுவையான நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்