குமரி நாட்டில் சமணம் வளர்ந்த வரலாற்றையும், வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களையும் விரிவாக ஆராய்ந்துள்ள நுால்; விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமண சமயமும் அறத் தத்துவமும் என்ற தலைப்பில் உள்ள செய்திகள், சமணத்தின் ஐந்து விரதங்களை குறிப்பிட்டுள்ளன. பிறவியை நிரந்தரமாக ஒழித்து, வீடு பேறு பெறுவதே குறிக்கோள் என்பது நிலைநாட்டப்படுகிறது.
மதவாதிகள் பற்றிய தகவல்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளன. சமணத்தைப் பிற சமயக் கொள்கைகளோடு ஒப்பிட்டுள்ளது. தமிழகத்தில் சமண மதம் செழுத்தோங்கிய அரிய செய்திகள், வழிபாட்டு இடங்கள், கல்வெட்டு தகவல்கள், திருவுருவங்கள் முறையாக ஆராயப்பட்டுள்ளன.
கடும் உழைப்பில் உருவான நுால்.
– ராம.குருநாதன்