மது போதையால் ஏற்படும் தீமை, பெண்கள் அனுபவிக்கும் கொடுமை, சாதி மத வேறுபாடு, வன்முறையால் ஏற்படும் அழிவுகளை தீர்க்கும் வழிமுறைகளை உள்ளடக்கிய சிந்தனையின் தொகுப்பு நுால். பல்வேறு பிரச்னைகளை மையமாக்கி கருத்துக்களை பதிவு செய்துள்ளது.
சமூக சிந்தனையை வெளிப்படுத்தும், 53 கட்டுரைகள் இந்த தொகுப்பில் உள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் இடையிலும் அறக்கோட்பாடு நிரப்பப்பட்டுள்ளது. இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு வழி வகைகள் கூறப்பட்டுள்ளன. நாட்டு நடப்புகளை அலசி ஆராய்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
அறிவுரை கூறுவதை விட, வாழ்வை செம்மையான வழிகளில் நடத்தி, முன் உதாரணமாக திகழ்வதே வழிகாட்டும் என்கிறது. உயர்ந்த கருத்துக்களை தாங்கியுள்ள நுால்.
– ராம்