மனிதன் பேராசையை கைவிட்டு, பற்றுகள் நீக்கி இறையருள் தேடலில் ஈடுபட சமயப் பாடல்களை எடுத்துக்காட்டி வலியுறுத்தும் நுால்.
அன்பே சிவம் என்ற தத்துவத்தை விளக்கும் திருமந்திரப் பாடல்கள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. இறைவனுக்கு புகழ் சாற்றும் பாடல்களே சிறந்ததென விளக்குகிறது.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், மெய்கண்டார், அருணந்தியார், உமாபதியார் வாழ்க்கை வரலாறு தரப்பட்டுள்ளது. தாயுமானவர் வாழ்க்கையும் தெய்வீகப் பாடல் வரிகளோடு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சித்தர்களைப் பற்றியும் விவரிக்கப்பட்டு -உள்ளது.
மனதை செம்மைப்படுத்த வழிகாட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு