திருக்கடையூர் சிவன் கோவில் அபிராமி மீதான பாடல்களுக்கு விளக்கம் தரும் நுால். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கூறி பாமாலையில் விவரிக்கப்பட்டுள்ளது.
அபிராமி அன்னையின் அழகு, அருள், அளப்பரிய ஆற்றலை எடுத்துக் கூறும் பாடல்களின் இனிமையை, விளக்கத்திலும் சுவை குன்றாமல் தந்திருப்பது சிறப்பு. அபிராமி பட்டரின் பாடல்களில் உள்ளார்ந்த சொற்களின் பின்னணியில் உள்ள புராணக் கதைகளும் விளக்கப்பட்டுள்ளன.
பாடியபோது பட்டர் எப்படியெல்லாம் நெகிழ்ந்தார் என்பதை விவரிப்பது பரவசப்படுத்தக் கூடியது. சிவனோடு அன்புடன் உறையும் அம்பிகையின் பாடல் வரிகளுக்கான விளக்கங்கள் நெகிழ்ச்சி தருகின்றன.
இறைவியோடு ஐக்கியமாவதை உணர்த்தும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு