கதாபாத்திரங்களே தங்களின் கதையைக் கூறும் வடிவில் எழுதப்பட்டுள்ள ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். சமுதாயத்தில் தற்காலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
ஒரே கல்லுாரியில் படித்த வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இளம்பெண்ணின் தந்தை, ஜாதி வெறி பிடித்தவர். பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை நகர, செலவுக்கு பணம் இன்றி வறுமை துரத்துகிறது.
அவனை வேலைக்கு அனுப்ப சம்மதிக்கிறாள். வேலைக்கு சென்றவன் இரவு வீடு திரும்பவில்லை. அன்று தான் அந்த சம்பவம் நடக்கிறது. ‘மன்னித்துவிடு மன்னவனே’ சிறுகதையின் இந்த முடிவு, படிக்கத் துாண்டும் வகையில் உள்ளது. புது சிந்தனையுடன் கூடிய கதைகளை உடைய நுால்.
– முகில் குமரன்