தமிழறிஞர் ஆறு.அழகப்பன் வாழ்க்கை செயல்பாடுகளை தொகுத்து போற்றுவது போல் எழுதப்பட்டுள்ள நுால்.
நிகழ்வுகள் தனித்தனியாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. அவரது பிறப்பு, கல்விப் பயிற்சி நிகழ்வுகள் தனித்தனி செய்தியாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர் பிறந்த பகுதியைச் சேர்ந்த கவிஞர் கண்ணதாசன் உட்பட பலரும், சுய பெயரை மாற்றியபோது, அதை மறுத்த நிகழ்வு முன் உதாரணமாக தரப்பட்டுள்ளது.
தமிழ் பணிகள் ஆற்றியது, வாழ்நாள் சாதனைகள், பரிசுகளை வென்றது குறித்த விபரங்களும் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியது பற்றிய நிகழ்வுகளும் தரப்பட்டுள்ளன. தமிழறிஞரின் வாழ்க்கை பணியை தொகுத்து தந்துள்ள நுால்.
– ராம்