பத்திரிகைகளிலும், வானொலியிலும் ஒலிபரப்பான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கும் பெற்றோரை பிள்ளைகள் மறந்து போவதால், பிரிவின் சோகம் எப்படி வாட்டி வதைக்கிறது என்பதை, ‘பெற்ற பிள்ளைகளா? கொக்குகளா?’ என்ற கதை விவரிக்கிறது.
மாணவனுக்கும், ஆசிரியருக்குமான நெருக்கத்தில் கற்கும் வாழ்வியல் பாடத்தை விவரிக்கும் ‘நினைவுகள் நீங்குவதில்லை’ கதை, கிராமங்களில் பரவி வரும் சூதாட்டம், மதுப்பழக்கம், வெட்டிப் பேச்சுகளால் காலமும் பணமும் எப்படி வீணாகிறது என்பதை உணர்த்தும், ‘பிரிவு உபசார விழா’ கதையில் அது தொடரக்கூடாது என்ற அக்கறை இருக்கிறது.
ஒவ்வொரு கதையிலும் இடம் பெற்றிருக்கும் தொலைநோக்கு பார்வை வியக்க வைக்கிறது.
– ஊஞ்சல் பிரபு