காதல் கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
‘ஊரடங்கு விதித்த இரவுகளில் கூட ஊர்வலம் வருகிறாய் என் கனாக்களில்’ என்ற கவிதை, இக்காலத்திற்கேற்ப ரசிக்கும் படியாக அமையப்பெற்று இருக்கிறது. பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் தாயின் வேதனை பெரிதாகும் பட்சத்தில், ‘20 ஆண்டுகளாய் என் இதயத்திலும் நினைவிலும் உன்னையும், காதலையும் சுமக்கும் என்னை என்ன சொல்வது’ என்கிறது.
அஞ்சுதலும், கெஞ்சுதலும், கொஞ்சுதலும் காதலுக்கு அழகு என்கிறது. காதலர்களுக்கு இருக்கும் நினைவைத் தவிர வேறொன்றுமில்லை நினைப்பதற்கு என்கிறது. காதலிப்பவரும், காதலிக்கப்படுபவரும் காதல் தேவதையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்கிறது.
ஒவ்வொரு கவிதையும் நேர்த்தியாகவும், ரசிக்கும்படியும் அமைந்துள்ளன.
– வி.விஷ்வா