நகைச்சுவை நடிப்பாற்றலால் உலகை திரும்பி பார்க்க வைத்த பிரபல நடிகர் சார்லி சாப்ளின் வாழ்க்கையை சுருக்கமாக தரும் நுால். ஐந்து வயதில் மேடையில் பாடியது முதல், 18 தலைப்புகளில் விபரங்கள் உள்ளன.
மிகவும் வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்த விபரம் விவரிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் செய்த முயற்சிகளை தெளிவாகத் தெரிவிக்கிறது. வறுமையைப் போக்க நாடகங்களில் நடித்தது குறித்து தெளிவாக உள்ளது.
நகைச்சுவை நடிப்பாற்றலால் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் வாழ்வில் பட்ட அவதிகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிரமங்களையும் தாண்டிய வாழ்க்கை பாடம் புத்தகம் முழுதும் மிக சுவாரசியமாக தரப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற நடிகரின் வாழ்க்கையை கதை போல் சொல்லும் நுால்.
– ராம்