கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
பொட்டிழந்த பூக்காரி, அரசியல் திருடர்கள், அரசியல் அக்கினிப் பரீட்சைகள், ஏமாற்றம், பட்டிமன்றம் உட்பட, 39 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.
உணர்ச்சியை துாண்டி சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. பொது வாழ்க்கையில் காந்தியப் புனிதர்களை கண்டெடுத்து, பொறுப்புகளில் அமர வைத்து வெளிச்ச விடியலை பரவ வைப்போம் என்கிறது.
ஜோதிடமும் பஞ்சாங்கமும் அறிவின் வெளிப்பாடல்ல; அவநம்பிக்கைகளே என்கிறது. உனக்காக பொய் சொல்பவன் உனக்கெதிராகவும் பொய் சொல்வான் என்கிறது. காவல் துறை அதிகாரிகள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டபடி மனசாட்சிக்கு பயந்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடமையாற்றி, சத்திய உலகை உருவாக்க வேண்டும் என்கிறது.
– வி.விஷ்வா