பழந்தமிழகத்தில் ஒரு பிரிவினரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை பட்டியலிட்டு விவரிக்கும் நுால்.
கள்ளர், மறவர் சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்கு முறை விளக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு, முடியிறக்குதல், காது குத்து சடங்குகளை விவரிக்கிறது.
திருமண ஓலை எழுதும் மாதிரி வடிவங்களை வழங்குகிறது. இறந்தவர் உடலில் கட்டப்படும் கட்டுகளை எடுத்துரைக்கிறது. தாலாட்டு மற்றும் மாரடிப் பாட்டுகள் பாடப்பட்ட சூழலையும், வழிமுறையையும் எடுத்துரைத்துக்கிறது.
சைவம், வைணவம் என பேதம் இல்லாமல் இறை நம்பிக்கை இருந்ததும் காட்டப்பட்டு உள்ளது. மாரடிப் பாடல்களைத் திரட்டி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. களப்பணியுடன் படைக்கப்பட்ட சமூக வரலாற்று ஆவண நுால்.
– முகிலை ராசபாண்டியன்