சமையல் தொழிலால் வாழ்வின் உச்சம் தொட்டவர்களின் கதையை எளிய நடையில் புனைந்துள்ள புதினம்.
மனமொத்த தம்பதி விஸ்வநாதன் – கோகிலா. மதுரை அழகர் கோவில் பக்கத்தில் வீடு, ஹோட்டல் எல்லாம். சுவைக்காக வரும் கூட்டம். ஒரே ஆண் குழந்தை கிட்டப்பா. பக்கத்து மரத்தடியில் பெயர் தெரியாத ஆதரவற்றவருக்கு நாமகரணம் சூட்டி முதல் உணவு படைக்கப்படுகிறது.
மன நோயால் பாதிக்கப்பட்ட மகனை குணப்படுத்த மருமகள் சாயலிலிருந்தவளை கடத்தி வந்தனர் தம்பதி. கணவன், குழந்தை நினைவில் இருந்தவள் விதிவசத்தால் விலை மாதாக்கப்பட்டு துயரத்தில் வீழ்ந்தாள்.
கிட்டப்பா சென்னை சென்றான்; ஹோட்டல் அதிபர் ஆனான்.அவன் திருமணத்தில் நிகழ்ந்தது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் புதினம்.
– புலவர் சு.மதியழகன்